திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்புசாமி, அருண், அசோக். இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள பாடகிரி மலைப்பகுதியிலிருந்து அவசர ஊர்தி வாகனம் மூலம் கஞ்சா வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் உடுமலையில் உள்ள தனியார் அவசர ஊர்தி வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது உறவினர் ஆந்திராவில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை கோவை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும் கூறி சென்றுள்ளனர்.
இதையடுத்து, மூன்று நாட்கள் கடந்த நிலையில், அவர்கள் மூவரும், அவசர ஊர்தி வாகனமும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவசர ஊர்தி வாகனத்தின் உரிமையாளர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே, கோவை போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு அவரசர ஊர்தி மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.