திருப்பூர் மாவட்டம் உடுமலையிலுள்ள ஒரு அட்டை நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சல்கோவா அஞ்சல், பிரெமோஜோதி தூரி (22) தம்பதி வேலை செய்து வந்தனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு அறிமுகமகியுள்ளார்.
உடுமலையில் வேலை குறைவாக இருந்ததால், ராஜேஸ்குமாரிடம் வேலை எதாவது வாங்கித் தரும்படி பிரெமோஜோதி தூரி கூறியுள்ளார். ராஜேஷ்குமார் நேரில் வர சொன்னதையடுத்து கடந்த 28 ஆம் தேதி திருப்பூர் வந்துள்ளார். பிரெமோஜோதி தூரிக்கு, சில இடங்களுக்கு நேரில் சென்று வேலை இல்லை என கூறிய பிறகு , தன்னை மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடும்படி ராஜேஷிடம் கூறியுள்ளார்.
ஆனால், ராஜேஷ்குமார் தன்னுடைய தம்பி ராஜூவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லுமாரு கூறியதையடுத்து, அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், ராஜூ, பேருந்து நிறுத்தம் செல்லாமல் உகாயனூர் அருகிலுள்ள பாறைக்குழிக்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த ராஜூ-வின் நண்பர்களாகிய தமிழ் , தாமோதரன் , அன்பு , கவின் ஆகிய நான்கு நன்பர்களுடன் சேர்ந்து அசாம் மாநில பெண் பிரெமோஜோதியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.