தமிழ்நாடு

tamil nadu

ராம்ராஜ் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரிப்பு: மூவர் கைது!

திருப்பூர்: ராம்ராஜ் பெயரில் போலியான முகக்கவசங்கள் தயாரித்த மோசடி கும்பலை கையும் களவுமாக பிடித்த ராம்ராஜ் ஊழியர்கள், அந்தக் கும்பலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

By

Published : Oct 10, 2020, 4:37 AM IST

Published : Oct 10, 2020, 4:37 AM IST

ராம்ராஜ் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரிப்பு
ராம்ராஜ் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரிப்பு

திருப்பூரை தலைமையகமாக கொண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கிளையை தொடங்கி வேட்டி, சட்டை, உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்துவரும் ராம்ராஜ் நிறுவனம் தற்போது முகக்கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி முகநூல் பக்கத்தில் சீனு என்பவர் ராம்ராஜ் முகக்கவசங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதைக் கண்டு ராம்ராஜ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நிறுவனர் நாகராஜனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நிறுவனர் நாகராஜனின் அறிவுறுத்தலின் பேரில் நூதனமாக இந்தக் கும்பலை பிடிக்க திட்டமிட்டு, முகநூலில் பதிவிட்ட சீனு என்பவரை தொடர்பு கொண்டு அவர் மூலம் போலியாக தரமற்ற முறையில் முகக்கவசங்கள் தயாரிக்கும் நேர்மைநாதன் என்பவரை அணுகியுள்ளனர். அவர் தற்போது ஸ்டாக் இல்லை எனவும் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதால் சில நாள்களில் தயார் செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, 30 ஆம் தேதி அவரிடம் முகக்கவசங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து முன்பணமும் கொடுத்துள்ளனர். அதன்படி நேற்று (அக்.08) முகக்கவசங்கள் தயாராகிவிட்டதாக மோசடி கும்பல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கே.வி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அவர்களது குடோனுக்குச் சென்று பார்த்துள்ளனர், அங்கு ராம்ராஜ் முத்திரையுடன் போலியாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவர்

இதனையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், போலியாக தயாரிக்கப்பட்ட ஆயிரத்து 500 முகக்கவசங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த மோசடி செயலில் ஈடுபட்ட நேர்மைநாதன், ராம்ராஜ் முத்திரையை வடிவமைத்து பிரிண்டிங் செய்த முருகன், முகநூலில் விளம்பரப்படுத்திய சீனு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சூரியிடம் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மோசடி

ABOUT THE AUTHOR

...view details