திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஊரக பெண் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பெண் காவலரை ஆபாசமாக போட்டோ எடுத்து கம்பி எண்ணும் இளைஞர்!
திருப்பூர்: ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் புகைப்படம் எடுப்பதை பார்த்த பெண் காவலர், அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைப் பார்த்த சக காவலர்கள் அந்த இளைஞரிடம் செல்போனை பரித்து பார்த்தபோது, பெண் காவலர்களை அந்த இளைஞர் ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் அவரிடம் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்(34) என்பதும், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.