தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் - தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பூர்: மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மக்கள் குறைதீர் கூட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம்

By

Published : Aug 4, 2020, 4:48 AM IST

கரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 3) முதல் தொலைபேசி வாயிலாக திங்கட்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) காலை 11 மணி முதல் தொலைபேசி வாயிலாக பொது மக்களிடமிருந்து குறைகள் பெறப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணில் வந்த அழைப்புகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பேசி சம்பந்தப்பட்ட துறைக்கு குறைகளை பரிந்துரைத்தார். ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தொலைபேசி வாயிலாக மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details