தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - திருப்பூர் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருப்பூர்: பாரதிதாசன் நகர் பகுதியிலுள்ள பாஜக மண்டல வணிக பிரிவு துனைத் தலைவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

By

Published : Sep 23, 2020, 10:05 PM IST

திருப்பூர் மாவட்டம் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜகவில் புதியதாக தன்னை இனைத்து கொண்டார். இவருக்கு அங்கேரிபாளையம் மண்டல வணிக பிரிவு துனைத் தலைவராகவும் பொறுப்பு வழங்ப்பட்டது.

மேலும், இவரது மனைவி மேனகாவுக்கும் மண்டல பொது செயலாளர் பொறுப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ( செப்.23 ) அவரது மூத்தமகன் பிறந்தநாள் என்பதால் அதிகாலையில், பழனி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் காவல் துறையினர், பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'இதைச் செய்தால் திமுக கூட்டணி உடையும்' - பொன் ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details