தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 11:16 AM IST

ETV Bharat / state

பட்டியலின குடும்பம் ஊருக்குள் நுழைய தடை? நிலப் பிரச்சினையில் தொடங்கியதா மோதல்?

இடப்பிரச்சினை காரணமாக ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும் பிற சாதியினருடன் சேர்ந்து மிரட்டுவதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்து உள்ளனர்.

district collector
இடப்பிரச்னை காரணமாக ஊருக்குள் நுழையத் தடை

திருப்பூர்மாவட்டம் கண்டியன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சோமன். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரான சோமனுக்கும், சக சமூகத்தை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 3 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் இடப்பிரச்னை காரணமாக ஊருக்குள் நுழைய தடை

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கார்த்தி குடும்பத்திற்கும், சோமன் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டு, அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் FIR-பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சோமன் மற்றும் இரண்டு மகன்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரும் 56 நாட்கள் சிறையில் இருந்து உள்ளனர்.

பின்னர், பிணையில் வந்த நிலையில், தற்போது 100 நாட்களுக்கு மேலாகியும், சோமனின் குடும்பத்தார் சொந்த ஊருக்குள் வரக்கூடாது எனவும், அப்படி வந்தால் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் சிலரின் தூண்டுதலின் பேரில், கார்த்தி குடும்பத்தினர் தனது குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும், வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் வளைகாப்பு! பெண் காவலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details