தூத்துக்குடி சம்பவத்திலிருந்து சாத்தான்குளம் சம்பவம் வரை காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் அப்பாவி மனித உயிர்கள் உயிரிழந்து வருவது கண்டிக்கத்தக்க விஷயம் என்றும், காவல் துறையில் பணியாற்றும் சிலர் மனிதநேயமே இல்லாமல் அரக்கத்தனமாக நடந்து கொள்கின்றனர் என சமூகசெயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அத்துமீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - காவல்துறை அத்துமீறல்
திருப்பூர்: அத்துமீறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட தமிழர் கட்சியினர், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாரியிடம் மனு அளித்தனர்.
![அத்துமீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! Petition to sub collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7888287-thumbnail-3x2-su.jpg)
Petition to sub collector
இந்நிலையில், காவல் துறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளதை கண்டித்தும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தாராபுரம் உதவி ஆட்சியர் பவன்குமாரிடம் திராவிடர் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ராமன் தலைமையில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:’சிறைச்சாலை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை’ - தென்மண்டல ஐஜி