தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்ய வேண்டும்: ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு! - Tiruppur district news

திருப்பூர்: அரசுப் பணிகளில் டெண்டர் கோரும் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு
ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு

By

Published : Aug 25, 2020, 12:18 AM IST

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் டெண்டர் கோரும் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேற்று (ஆகஸ்ட் 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கோபால் கூறுகையில், "ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவே மத்திய அரசின் நிதிக் குழு மானிய நிதியை ஒதுக்கி வருகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு

தற்போது மத்திய அரசும், மாவட்ட நிர்வாகமும் ஊராட்சிகளின் ஒப்புதலின்றி பேக்கேஜ் டெண்டர் முறையை பின்பற்றி வருகிறது. இதேபோல் ஜேஜேஎம் திட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டமும் டெண்டர் முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பஞ்சாயத்து தலைவர்கள் என, நாங்கள் எந்த பணிகளையும் செய்ய முடியாத சூழல் உள்ளது. இது குறித்து மதுரை, சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், பஞ்சாயத்து தலைவர்களுக்கு பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே அதே போல் திருப்பூர் மாவட்டத்திலும் செயல்படுத்த வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: தலைவர்னு உன் பெயரை எழுதவிட மாட்டேன்’ - பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details