தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் குவாரிக்கு எதிராக செயல்படும் கும்பல் - உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு - petition to tiruppu collector

திருப்பூர்: உரிய ஆவணங்களுடன் மணல் குவாரி நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மணல் குவாரிக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் மனு அளித்தார்.

petition against persons disturbing sand quarry business
petition against persons disturbing sand quarry business

By

Published : Nov 23, 2020, 6:51 PM IST

திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். மாவட்ட ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்துவரும் இவர், ஊத்துக்குளி தாலுகாவிற்குட்பட்ட புத்தூர்பள்ளபாளையம் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் மணல் குவாரி நடத்தி வருகிறார். மணல் குவாரிக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாகப் பெற்று நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த கிராமத்திற்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் குண்டர்களின் உதவியோடு தொடர்ந்து அப்பகுதியில் மணல் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மணல் குவாரி பணிக்கு வந்த லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 3 பேரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்துள்ள சூழ்நிலையில், தற்போது தொழில் செய்ய விடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாங்கள் தொழில் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சாமிநாதன் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details