திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து கவுண்டன் வலசு என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையில் செப்டம்பர் ஏழாம் தேதி இரவு அதன் ஊழியர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் மதுபானம் வாங்குவது போல் நடித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியை ஊழியர்கள் மீது தூவி, கத்தியை காட்டி மிரட்டி 1.43 லட்சம் பணத்தையும், ஊழியர்களிடமிருந்த ஒரு சவரன் தங்க நகையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அவரின் ஆலோசனையின்படி தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.