தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் விடுதியில் இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு! - இலங்கை நபர் மரணம்

திருப்பூர்: தனியார் விடுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் விடுதியில் இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!
தனியார் விடுதியில் இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

By

Published : Mar 9, 2020, 7:52 PM IST

இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார். அங்கு மூன்று நாட்கள் தங்கிய பின்பு, பின்னலாடைகள் கொள்முதல் செய்வதற்காக திருப்பூர் வந்த அவர், ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் அவர் நேற்றிரவு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த நபர் திருப்பூர் தங்கும் விடுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் விடுதியில் இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நால்வர்!

ABOUT THE AUTHOR

...view details