திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் பள்ளபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட திருப்பதி கோயிலில் சனிக்கிழமை தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன்படி, நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா என்பதால் அதிகப்படியான மக்கள் தரிசனத்திற்காக வந்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆலயத்தில் அலைமோதிய கூட்டம் - adiperuku festivel
திருப்பூர் : ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருப்பதி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
திருப்பதி தரிசனத்திற்காக தார்சாலையில் வரிசை !
இதனால் கோயில் வளாகத்திற்குள் நிற்க இடமில்லாமல் பொதுமக்களின் வரிசை சாலைவரை நீடித்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் காவல்துறையினர் கண்காணித்தனர்.