இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், 'திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. இந்தச் சட்டத்தால் இந்தியாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் தீவிரவாதிகளை மட்டுமே இந்தச் சட்டம் தடுக்கும்.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா செய்தியாளர்கள் சந்திப்பு இந்தச் சட்டத்தால் இந்தியாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பிவருகிறன. இந்தப் பொய்ப் பரப்புரையால் ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு வெறுப்புணர்வு வந்துவிட்டது. வங்கதேச நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் திருப்பூரில் அதிக அளவில் உள்ளனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தட்கலில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!