திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் சிவசக்தி காலனியின் அருகே அதிகமாக குப்பைக் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிவசக்தி காலனிக்கு அருகில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பெரும் இடையூறாக உள்ளது.
குப்பைக் கிடங்காய் காட்சியளிக்கும் தாராபுரம்! - தாராபுரம்
திருப்பூர்: தாராபுரம் அருகே அதிகமாக குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குப்பைக் கிடங்காய் காட்சியளிக்கும் தாராபுரம்
இதைத் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை சாலையோரம் வாசிப்பு பலகை ஒன்றை வைத்திருந்தும் அதை பொருட்படுத்தாமல் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகம் முறையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.