தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: சாலையில் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம்! - Cpi protest in trippur

திருப்பூர்: மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: சாலையில் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம்!
Cpi protest in trippur

By

Published : Jul 15, 2020, 11:30 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்டப் பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக, வீரபாண்டி பகுதியில் உள்ள சாலை, திருப்பூர்-தாராபுரம் , திருப்பூர்-பல்லடம் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருக்கிறது.

இந்தச் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாகவும், சாலைகள் சேதமடைந்து ஜல்லிக் கற்கள் வெளியே தெரியும்படியும் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த மோசமான சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே, குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று(ஜூலை 15) சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல உயிர்களைக் காவு வாங்கும் மோசமான சாலையை, உடனடியாக சீரமைத்துத் தரக்கோரி மாநகராட்சியைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details