தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அரியை வாங்குவதற்கு குவிந்த மக்கள்: கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி! - Tiruppur top News

திருப்பூர்: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ரேஷன் அரிசியை வாங்குவதற்கு குவிந்த பொதுமக்களால் மீண்டும் கரோனா பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ரேசன் அரியை வாங்க குவிந்த மக்கள்: கேள்வி குறியாகும் சமூக இடைவெளி?
திருப்பூரில் ரேசன் அரியை வாங்க குவிந்த மக்கள்: கேள்வி குறியாகும் சமூக இடைவெளி?

By

Published : Jun 13, 2020, 10:23 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரேன் அரிசி வழங்குவதற்காக நேற்று (ஜூன் 12) டோக்கன் விநியோகிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று ரேசன் அரிசியை பெறுவதற்காக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். பின்னர், ரேஷன் கடை அலுவலர் வந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் விரைந்து பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரேஷனில் அரிசி வாங்குவதற்காகக் குவிந்த மக்கள்

சென்ற 40 நாள்களாக திருப்பூரில் கரோனா தொற்று இல்லாத நிலையில், நேற்றைய தினம் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இலவச அரிசியை பெறுவதற்காக மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது, மீண்டும் கரோனா பரவலை அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...மும்பையில் இருந்து கரோனாவுடன் திரும்பிய இளைஞர் உயரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details