தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2020, 11:08 PM IST

ETV Bharat / state

மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவித்த கோவை மக்கள்!

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் கரவொலி எழுப்பினர்.

கைத்தட்டி பாராட்டிய பொதுமக்கள்
கைத்தட்டி பாராட்டிய பொதுமக்கள்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இன்று ஒரு நாள் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளித்தனர்.

கோவையில் கை தட்டிய பொதுமக்கள்

அதன்பின் இன்று மாலை 5 மணியளவில், வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களின் நலனுக்காகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டும் விதமாக மக்கள் அனைவரும் வீட்டின் வாசலில் நின்று கை தட்டி தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இதேபோல், திருப்பூர் மாவட்ட மக்களும் கைகளைத் தட்டியும் பாத்திரங்களைத் தட்டியும் நன்றி தெரிவித்தனர். திருப்பூர் வெள்ளியங்காடு, பழைய பேருந்து நிலையம், காமாட்சியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும் குழந்தைகளும் கரவோசை எழுப்பினர்.

கை தட்டி பாராட்டிய பொதுமக்கள்

இதையும் படிங்க: அரியலூரில் மருத்துவர்களுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details