இசையால் இயங்கும் உலகம் என்பார்கள். உலக மனிதர்களை தான் இந்த இசை ஆட்டுவிக்கிறதா, என்றால் சில நேரங்களில் ஐந்தறிவு ஜூவராசிகளையும் அடக்கி ஆள்கிறது. குயில் பாட்டு, அலையோசை என இந்த பிரபஞ்சமே இசையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
'இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை' - கிளியின் மைன்ட் வாய்ஸ்
குயில் பாட்டு, அலையோசை என இந்த பிரபஞ்சமே இசையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த வரிசையில் கிளியொன்று 'இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை' என்ற கண்ணதாசனின் வரிகளை கமுக்கமாய் தனக்குள் அடக்கி கொண்டு முதியவர் ஒருவரின் பாடலை கேட்டு பவ்யமாக தலையாட்டும் காட்சி வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் கிளியொன்று ’இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை’ என்ற கண்ணதாசனின் வரிகளை கமுக்கமாய் தனக்குள் அடக்கிக் கொண்டு முதியவர் ஒருவரின் பாடலை கேட்டு பவ்யமாக தலையாட்டும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'கற்பகமே உனையன்றி துணை யாரம்மா' என்று பாடும் அவரின் பாடலை கேட்க வந்த கிளிதான் அங்கு அற்புதத்தை நிகழ்த்தியள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருப்பூர் அருகே சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறியுள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழன் வீர ராசேந்திரனால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறும் நிலையில், மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு ஒன்றும் இங்கு உள்ளது. மூலவருக்கு நேரெதிராக ஒன்றன்பின் ஒன்றாக இரட்டை நந்திகள் அமைந்திருப்பதே அந்த சிறப்பம்சமாகும். புவி ஈர்ப்பு விசையை போன்று இந்த புவியெங்கும் நிறைந்த இசை இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.