தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

திருப்பூர்: 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டதற்கு தனியார் பள்ளி நிர்வாகம்தான் காரணம் எனக் கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

By

Published : Feb 23, 2021, 8:12 AM IST

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் பனியன் வேஸ்ட் துணிகளை விற்பனை செய்துவருகிறார். இவரது மகன் தேவா மணிகண்டன் (16), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இவர் சரியாகப் படிக்கவில்லை என கடந்த வியாழக்கிழமை (பிப். 18) தந்தை குமாரை பள்ளிக்கு அழைத்து ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் மாணவன் மனமுடைந்து காணப்பட்டார்.

10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

அன்று மாலை வீடு திரும்பிய மாணவன் வீட்டில் உள்ள தனி அறையில் படிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் தந்தை கதவை உடைத்துப் பார்த்தார். அப்போது மகன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக திருமுருகன்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (பிப். 22) மாணவனின் தற்கொலைக்கு தனியார் பள்ளி நிர்வாகம்தான் காரணம் எனக் கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details