திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் விகாஸ் வித்யாலயா என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பயின்றுவரும் குழந்தைகளுக்கு அரசு வரையறை செய்யப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கட்டணத்தை குறைக்கக்கோரி பெற்றோர்கள் தர்ணா! - கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
திருப்பூர்: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
parents dharna for school fees hike
பள்ளியின் இந்தப் போக்கை கண்டித்து, பெற்றோர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் ஆட்சியர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து அது தொடர்பாக மனு அளித்தனர்.
இது குறித்துப் பேசிய ஒருவர், தன் மகன் யுகேஜி முடித்து முதலாம் வகுப்பில் சேர உள்ள நிலையில் 47 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் கேட்பதாகவும் பணத்தைக் கட்டாததால் புத்தகங்களைத் தர மறுப்பதாகவும் தெரிவித்தார்.