தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதியின் பெயரால் ஒடுக்குமுறை: மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் புகார் - Panchayat president met collector and gave complaint on caste discrimination issue

திருப்பூர்: பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வார்டு உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் புகார்
மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் புகார்

By

Published : May 21, 2020, 7:31 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு உள்பட்ட, கவுண்டச்சிப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வி. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், அதே ஊராட்சிப் பகுதியில் ஆறாவது வார்டு உறுப்பினராக உள்ள குப்புசாமி என்பவர் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக, காவல் நிலையத்தில் முன்னதாகப்புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரில், ஊரடங்கு சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு குப்புசாமியை அழைக்காததால், ஊராட்சி மன்றத் தலைவரான தன்னை ஜாதியின் பெயரைச் சொல்லி தரைக்குறைவாகப் பேசி அவர் தாக்க முயன்றதாகவும் செல்வி குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் புகார்

ஆனால் ஒரு மாதமாகியும் குப்புசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், பிற்படுத்தப்பட்ட சமூகக் கூட்டமைப்பினருடன் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று மனு அளித்தார்.

இதில், மக்கள் பணி செய்ய வேண்டிய தமக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குவதோடு சாதியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்த குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க :திருப்பூரில் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details