திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் முன்பு மூன்று பேர் மது அருந்தியுள்ளனர். இதனை செந்தில் ராஜ் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதனை தடுக்க முற்பட்டபோது செந்தில் ராஜின் தம்பி மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன் போதையில் இருந்த கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். முன்னதாக, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை உடல்களை பெறமாட்டோம் என உறவினர்கள் போரட்டதில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து உறவினர்கள் உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.