தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லடம் பகுதி மக்களுக்கு நிவாரணம்: முற்றுகையை அடுத்து எம்.எல்.ஏ நடவடிக்கை! - Corona relief items

திருப்பூர்: பல்லடம் அருகே பாரதிபுரம் பகுதி மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகளை அரசு சரி வர செய்து கொடுக்கவில்லை எனப் போராட்டம் நடத்திய பின்பு இன்று அம்மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்.

Relief supplies provided  பல்லடம் பாரதிபுரம் மக்கள்  பல்லடம் எம்எல்ஏ  கரைப்புதூர் நடராஜன்  பாரதிபுரம்
பல்லடம்- பாரதிபுரம் பகுதி மக்களுக்கு நிவாரணம்: முற்றுகை போராட்டத்தையடுத்து எம்.எல்.ஏ நடவடிக்கை

By

Published : Apr 30, 2020, 12:52 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடம்- பாரதிபுரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும் அங்கிருக்கும் மக்கள் வெளியே செல்லவும் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தச்சூழ்நிலையில், அங்கு இருக்கும் மக்கள் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், மக்களுக்காக பணியாற்றுவதும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதுமே எனது பணி எனக் கூறி, அம்மக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பாரதிபுரம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன்

24 மணி நேரத்தில் நிவாரண உதவிகள் செய்யப்படும் என அவர் உறுதியளித்ததையடுத்து அங்கிருந்த மக்கள் கலைந்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை பாரதிபுரம் பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 15 கிலோ அரசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் ஊரடங்கைத் தளர்த்த வாய்ப்புள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details