திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்ச மழையாக தாராபுரத்தில் 165 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்தக் கனமழையின் காரணமாக அமராவதி பாசன ராஜ வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. தாராபுரம், மூலனூர், புதுப்பாளையம் பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.