தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் நேரடியாக எங்களை சந்திக்கலாம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

திருப்பூர்: தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு, விவசாயிகள் நேரடியாக எங்களை சந்திக்கலாம் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

By

Published : Jul 30, 2020, 7:48 PM IST

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஆவின் தொகுப்பு பால் குளிரகத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பால்வள ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனியாக தொடங்கப்பட்டு 2.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 80 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு முதல் சேர்க்கை தொடங்குகிறது. பால் உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் உள்ளது. எனவே கூடுதல் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான கேள்விக்கு மக்களவை உறுப்பினர்கள் கருத்து கேட்டு வருகின்றனர். அவர்கள் நேரடியாக எங்களை சந்திக்கலாம் இந்த அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு நேரடியாக எங்களை சந்திக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details