திருப்பூரின் வெற்றி அமைப்பும், நாகையைச் சேர்ந்த இன்ஸ்பயர் ஹோம் என்ற அமைப்பும் இணைந்து திருப்பூரில் ஆண்டிபாளையம் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரம்பொருள் என்னும் பெயரில் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் நஞ்சில்லா விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்குள்ள பண்ணையில் ஆடு, கோழி, மீன் போன்றவை வளர்க்கப்பட்டு விற்பனை செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். மேலும் இங்கு தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும் இயற்கை உரம் மூலம் பயிரிடப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது காய்கறிகளை வாங்கி ச் செல்லும் வகையில் விற்பனை செய்து வருவதால், இந்த முயற்சி பொதுமக்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.