தமிழ்நாடு முழுவதும் அரசு மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .