திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவர் தனது நண்பர்கள் ராஜூ, நிஷாந்த் ஆகியோருடன் வெள்ளக்கோயில் அருகே கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். இவர்களுக்கு முன்னால் கோவை மாவட்டம் சூலூர் நோக்கி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென திரும்ப முயன்றதால் வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
பைக் மோதிய வேகத்தில் கவிழ்ந்த ஆம்னி வேன்: ஒருவர் உயிரிழப்பு - one person died at tirupur accident
திருப்பூர்: வெள்ளக்கோயில் அருகே ஆம்னி வேன் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இருசக்கர வாகனம் மோதியதில் வேனும் கவிழ்ந்தது. விபத்தில் தூக்கிவீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜூ, நிஷாந்த் வேனில் வந்த இருவர் காயமடைந்தனர். வேனில் வந்த இருவரும், காயங்களுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளக்கோயில் காவல் துறையினர் ராஜூ, நிஷாந்த் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மகேந்திரன் உடல் உடற்கூராய்வுக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.