தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் திலிப்சர்மா (39). இவர் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி பணியன் நிறுவனத்தில் பியூசிங் மிஷின் ஆபரேட்டராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையிழந்த அவர், தள்ளுவண்டியில் தேங்காய், காய்கறிகள், பழ வியாபாரம் செய்துவந்தார்.
இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று கொங்கு மெயின் ரோடு எஸ்.வி.காலணி பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார், திலிப்சர்மாவின் தள்ளுவண்டி மீது மோதியது. இதில் தள்ளுவண்டியுடன் சேர்த்து திலிப்சர்மா தூக்கிவீசப்பட்டார். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அங்கிருந்து சென்றது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாய் குறுக்கிட்டதால் விபத்து - தந்தை, மகள் உயிரிழந்த சோகம்