திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வது வார்டு பகுதியில் உள்ள குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் பள்ளம் தோன்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொது பழங்காலத்து முதுமக்கள் தாழி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பள்ளம் தோன்டும் பணியை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் முதுமக்கள் தாழியை பத்திரமாக எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்ததுள்ளது.
அதனை அடுத்து முதுமக்கள் தாழி மற்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பத்திரப்படுத்தப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும்போது, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதுமக்கல் தாழி மற்றும் அதில் கண்டறியப்பட்ட எலும்புகள் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்டு, அவற்றை வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்கள் தொல்லியில் துறையினர் அவற்றை ஆய்வு செய்து, எத்தனை ஆண்டுகள் பழமையானது என தெரிவிப்பார்கள் என கூறினார்.
தமிழகத்தில் சில பகுதிகள் நடக்கும் அகழ்வாராய்ச்சி பணிகள் முதுமக்கள் தாழி, பழங்கால பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திருபூர் மாநகரின் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில், பழமையான முதுமக்கள் தாழி எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து அப்பகுதியில் நடைபெற்று வந்த குழாய் பதிக்கும் பணி தற்காலியமாக நிருத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருப்பூரில் பள்ளி மைதானத்தில் மரம் நடவதற்காக குழி தோண்டும் போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது நகரின் மையப்பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய ஆழ்கடல் பகுதியில் கப்பல் மோதி விபத்து: 12 இந்திய மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் மனு!