தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 4 மணி நேரம் கேட்பாரற்று கிடந்த முதியவர் உடல்

திருப்பூர்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நான்கு மணி நேரம் கேட்பாரற்று முதியவர் உடல் கிடந்ததால் மருத்துவமனை நோயாளிகள், பார்வையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

By

Published : Jun 26, 2020, 10:20 AM IST

old-man-dead-body-in-thirupur-gh-entrance
old-man-dead-body-in-thirupur-gh-entrance

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் நேற்று (ஜூன் 25) மதியம் 2 மணி அளவில் முதியவர் ஒருவரின் உடல் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளது. அதனைக் கண்ட மருத்துவமனை செவிலியர் கண்டும்காணாமல் சென்றுவந்தனர்.

அதனைக் கண்டு அச்சமடைந்த பார்வையாளர்கள் இது குறித்து பலமுறை தெரிவித்தும், 'இப்போதைக்கு ஊழியர்கள் இல்லை. வந்தவுடன் உடலை அப்புறப்படுத்திவிடுவோம்' என மருத்துவமனை நிர்வாகத்தினர்அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர்.

கேட்பாரற்று கிடந்த முதியவர் உடல்

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவரக்கூடிய இந்தச் சூழ்நிலையில் முதியவர் எப்படி உயிரிழந்தார் என்பதுகூட தெரியாமல் அவரது உடல் நான்கு மணி நேரமாகக் கிடந்ததால் மருத்துவமனை நோயாளிகள், பார்வையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:நேற்று காணாமல் போன பாதிரியார் இன்று பிணமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details