கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டம்தோறும் சந்தைகளில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா என அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வெங்காயம் மண்டிகளில் உணவு வழங்கல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வெங்காயம் மண்டி உரிமையாளர்கள் எத்தனை டன் வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் தற்போது கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.