தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் கைது - Tirupur sexual harassment issue

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

reare
re

By

Published : Oct 21, 2020, 6:58 AM IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.பெரியபாளையம் பகுதியில் வசிப்பவர் ரபி (26). ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர், தனது பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு, வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்ததை அழுதபடியே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details