திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் பின்னலாடை சார்ந்த நிறுவனம் நடத்திவருகிறார். இதற்காக கடந்த 2015ஆம் வருடம் முத்துசாமி என்பவரிடம் தனக்குச் சொந்தமான 760 சதுர அடி நிலத்தை அடைமானம் வைத்து, மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
கடன் பெற்றது முதல், முறையாக தவணைத் தொகை செலுத்திவந்துள்ளார். இந்நிலையில் கரோனா ஊரடங்கின் காரணமாக லட்சுமியால் கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் முத்துசாமி, தனது அடியாள்களுடன் வந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அடைமானமாக வைத்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்கப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.