தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்வழி நீர் தேக்கத்துக்கு தண்ணீர் திறப்பு –விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: முத்தூர் தடுப்பணையில் இருந்து கார்வழி நீர் தேக்கத்துக்கு தண்ணீர் திறந்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Muttur
Muttur

By

Published : May 2, 2020, 12:29 PM IST

நொய்யல் ஆற்றிலிருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து வந்தது. இதனை பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ஆம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகாவில் 300 ஏக்கர் பரப்பளவுள்ள கார்வழி நீர் தேக்கத்துக்கு சென்று நிரம்பிய பின்னர் பாசன கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

கார்வழி நீர்தேக்கத்துக்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடுவது கடந்த 2000ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால் மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை, பாசனத்திற்கு திறக்கவேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து கடந்த ஆண்டு மழை காலத்தில் தண்ணீரில் டீ.டி.எஸ் 1000க்கும் குறைவாக வந்ததை அடுத்து கால்வாயில் திறக்கப்பட்டு, கார்வழி நீர்தேக்கம் நிறைந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை திருப்பூர், நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள நீர் ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இந்தத் தண்ணீர் சின்ன முத்தூர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

கரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மதியம் முதல் கார்வழி அணைக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது சின்ன முத்தூர் தடுப்பணையில் 15 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் டீ.டி.எஸ் 958 ஆக இருக்கிறது. கோடை மழையால் நொய்யலில் வந்த மழை நீர் கார்வழி நீர் தேக்கத்துக்கு திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details