திருப்பூர் மாவட்டம் பி.என்.சாலை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்(58). இவர் திருப்பூரிலுள்ள நாளிதழ் ஒன்றில் பகுதி நேர எழுத்தாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழப்பு! - கரோனாவால் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு
திருப்பூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Corona cases
அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, இரண்டு நாள்களாக சிகிச்சையில் இருந்த அவர், இன்று (செப்டம்பர் 3) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.