தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறப்பு - New Family Welfare Court opens in Tirupur

திருப்பூா்: லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறக்கப்பட்டது.

திருப்பூரில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறப்பு
திருப்பூரில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறப்பு

By

Published : Mar 13, 2020, 2:29 PM IST

திருப்பூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி, புதிதாக குடும்ப நல நீதிமன்றத்தைத் திறந்துவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மேலும், மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயந்தி, இந்த புதிய நீதிமன்றத்திற்கு நீதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருப்பூா் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றம், திருப்பூா் முதன்மை சார்பு நீதிமன்றம், திருப்பூா் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில், ஏற்கனவே பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவரும் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள், இந்த குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளது.

திருப்பூரில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறப்பு

மேலும், வரும் காலங்களில் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் அனைத்தும், இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் என்று பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் மாவட்ட நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செயற்கை இழையால் ஆன மதிப்பெண் சான்றிதழ்கள் - கிழியவோ, சேதமோ ஆகாது!

ABOUT THE AUTHOR

...view details