சின்னதம்பி யானை தனது குடும்பத்திடம் இருந்து பிரித்து டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டதையடுத்து, தன் குடும்பத்தை தேடி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தது வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஓய்வெடுக்காமல் சுற்றி வந்த சின்னதம்பி யானை நேற்று ராமசாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ஓய்வெடுத்தது.
சின்னத்தம்பி விவகாரம்: களம் இறங்கிய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார்! - naxal protection force
திருப்பூர்: கரும்பு தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஓய்வெடுத்து வந்த சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் காவல்துறையுடன் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்துள்ளனர்.

அதன் பின்னர் மீண்டும் எழுந்து அந்த இடத்தில் சுற்றி வந்த யானை பின்னர் கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள வாழை மரங்களை சேதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த யானையை திரும்பவும் காட்டுப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்த வனத் துறையினருடன், துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு காவல்துறையினரும் இணைந்துள்ளனர். இதனால் சின்னதம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நெட்டிசன்களும், மக்களும் கலவரமடைந்துள்ளனர். சின்னதம்பியை எந்த காயமும் இன்றி காட்டுக்குள் அனுப்பி விட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.