தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மங்கள இசை வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்த இசைக் கலைஞர்கள்! - Tirupur District News

திருப்பூர்: நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேளங்கள் முழங்க இசை அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இசைக்கலைஞர்கள்
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இசைக்கலைஞர்கள்

By

Published : Oct 13, 2020, 2:11 AM IST

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டுபுற இசை கலைஞர்கள் இருக்கின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாத காலமாக எந்த சுப நிகழ்ச்சியும், கோவில் திருவிழாக்களும் நடைபெறாத நிலையில், தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மங்கள இசை வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இசைக் கலைஞர்கள்

அந்த மனுவில், சுப நிகழ்ச்சிகளில் மங்கள இசை கலைஞர்களுக்கு தடை இல்லாமல் செய்திட வேண்டும், கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், நாட்டுப்புற நையாண்டி மேளம் உள்ளிட்டவைகளை அனுமதித்திட வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவித்தொகை கிடைத்திட வழி செய்ய வேண்டும், அரசு வழங்கும் விலை இல்லா இசைக்கருவிகளை மாவட்டத்திற்கு தலா 100 பேருக்கு வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதையும் படிங்க:திமுக வாரிசு அரசியல் குறித்து மீம்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details