திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துவருகின்றன. மேலும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை பத்து மணியளவில் சாமுண்டிபுரம் பகுதியில் நடந்து வந்துகொண்டிருக்கும்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ராம்பிரபுவை கத்தியால் குத்தியதில், மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் காவல் துறையினர், ராம்பிரபுவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.