தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா பிரதமரே! - எம்.பி சுப்பராயன் - மின் விளக்கை அணைத்து, அகல் விளக்கை ஏற்ற வேண்டும்

திருப்பூர்: மின் விளக்குகளை அணைத்து, அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என திருப்பூர் எம்.பி சுப்பராயன் கோரியுள்ளார்.

திருப்பூர் எம்பி சுப்பராயன்
திருப்பூர் எம்பி சுப்பராயன்

By

Published : Apr 3, 2020, 4:29 PM IST

திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மின் விளக்குகளை அணைப்பதன் மூலமும், அகல்விளக்கை ஏற்றுவதன் மூலமும் அறிவியல் பூர்வமான காரணம் உண்டா என்பதை பிரதமர் விளக்க வேண்டும். பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்-சின் தலைவர் அல்ல, அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டிய இந்தியாவின் பிரதமர்.

மக்களவையை புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி, 130 கோடி மக்களுக்கு நோய்தொற்றை தவிர்க்க 15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமானதா? அனைத்துக்கட்சி ஆலோசனை தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்திருப்பது சரியில்லை. தமிழ்நாடு கரோனா தொற்றில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. ரேஷன் கடைகளில் அதிமுக, பாஜக கட்சிகளின் தலையீடு, ரேசன் கடை முன்பு அதிமுக பேனர் வைத்து அரசியல் விளம்பரம் செய்துவருகின்றனர்.

திருப்பூர் எம்பி சுப்பராயன்

இதுகுறித்து புகார் தெரிவிக்க மக்களவை உறுப்பினராகிய நான் அழைத்தும் தாசில்தார் அழைப்பை எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தலைமை செயலாளாரிடம் புகார் அளித்துள்ளேன். பதில் இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்" என்றார்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் எதிரோலி: தனிப்படுத்தப்பட்ட மதுராந்தகம்!

ABOUT THE AUTHOR

...view details