திருப்பூர் ரயில் நிலையத்தைம், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் ஆய்வு செய்தார். அதன்பிறகு திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகளுடன், எந்தெந்த வசதிகள் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தேவை எனவும், பயணிகளின் வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர் . பின்னர் ரயில்நிலையத்தில் பார்சல் அனுப்பும் மையம், பயணிகளின் ஓய்வறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
"திருப்பூரில் நின்று செல்லும் ரயில்களின் நேரத்தை அதிகப்படுத்துக" - சுப்பராயன் எம்.பி., பேட்டி! - திருப்பூர்
திருப்பூர்: நின்று செல்லும் ரயில்களின் நேரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தப் போவதாக ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பேட்டியளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருப்பூர் எம்.பி, "வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தினந்தோறும் திருப்பூர் ரயில் நிலையம் வழியாக வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூரில் இரண்டு நிமிடம் மட்டுமே ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் சிரமம் அடைவதாகவும், அதனால் திருப்பூரில் ஐந்து நிமிடமாவது நின்று செல்ல வேண்டும்" எனவும் தெரிவித்தார். மேலும், "ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எந்த பணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை அழைக்காதது குறித்து நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் முறையிட உள்ளதாகவும்" கூறினார்.