திருப்பூர் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிக்கப்படாத செல்போன் டவர் இன்று(ஆகஸ்ட் 4) திடீரென சாலையில் சரிந்து விழுந்தது. அதனால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒரு காரும் சிக்கி சேதமடைந்தது.
தகவலறிந்த வீரபாண்டி காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர்.