திருப்பூர் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில், மேட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவராக போட்டியிட்ட ஆர். விசாலாட்சி (82) வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சரான துரை ராமசாமியின் மனைவி ஆவார். மேட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டனர். அதில் ஆர். விசாலாட்சி 3069 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சாந்தி 2728 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் விசாலாட்சி 341 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தாய் ஊராட்சித் தலைவர்... மகன் ஒன்றிய கவுன்சிலர் - ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்
திருப்பூர்: முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி விசாலாட்சி ஊராட்சித் தலைவராகவும், அவரின் மகன் சுதர்சன் ஒன்றிய கவுன்சிலரகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Mother and son win in same local election
ஒரே உள்ளாட்சி தேர்தலில் தாயும், மகனும் வெற்றி
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட விசாலாட்சி - துரை ராமசாமி தம்பதியரின் மகன் ஆர்.வி. சுதர்சனும் வெற்றிபெற்றார். ஒரே உள்ளாட்சித் தேர்தலில் தாயும் மகனும் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து!