திருப்பூர், காங்கேயம் ரோடு, ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி நித்யா. இந்த தம்பதியருக்கு தர்ஷன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல், மகுடேஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டார். முதல் தளத்தில் குடியிருக்கும் நித்யா நீண்ட நேரமாகியும் கீழே வராததால், அக்கம்பக்கத்தினர் மேலே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த நித்யா தூக்கில் தொங்கியபடி இறந்ததைக் கண்டுள்ளனர்.
தாயும் சேயும் உயிரிழப்பு - காவல் துறையினர் விசாரணை - Police investigations
திருப்பூர்: காங்கேயம் பகுதியில் தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்தும், அவரது ஒரு வயது குழந்தைக் கட்டிலின் மேல் இறந்து கிடந்தும் காணப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Mother and child died
பின்னர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நித்யா தூக்கில் தொங்கியபடியும், கட்டிலில் ஒரு வயது குழந்தை தர்ஷனும் இறந்து கிடந்துள்ளனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையைக் கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.