கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் சி.பி.,ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் இன்று பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தேர்தலில் வெற்றிப்பெற்றால் பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசல் இல்லாத பல்லடமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.
ஜெயலலிதாவுடன் மோடிக்கு இருந்த நட்பு தான் கூட்டணிக்கு காரணம்- பாஜக வேட்பாளர் - பாஜக வேட்பாளர்
திருப்பூர்: ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடிக்கு இருந்த நட்பு தான் தற்போது கூட்டணியாக உருவெடுத்துள்ளது என்றும், யாரோ மிரட்டினார்கள் என்பதால் கூட்டணி வைக்கவில்லை என கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக வேட்பாளர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடிக்குஇருந்த நட்புதான் தற்போது கூட்டணியாக மாறியிருக்கிறது. யாரோ மிரட்டினார்கள் என்பதனால் கூட்டணி வைக்கவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.