தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மோடிதான் ஜல்லிக்கட்டு நாயகன்' - பிரதமரைப் புகழ்ந்த ஓபிஎஸ் - OPS

திருப்பூர்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடிதான் ஜல்லிக்கட்டு நாயகன் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

By

Published : Mar 30, 2021, 5:12 PM IST

Updated : Mar 30, 2021, 6:56 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "பாஜக தமிழ்நாட்டிற்கு அதிக திட்டங்களை அளித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்குப் போதிய நிதியினை ஒதுக்கிவருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ் கட்சி. ஒட்டுமொத்த நாட்டையும் காங்கிரஸ் கட்சி பின்னோக்கி இழுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை வரக் காரணமாக இருந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான். ஆனால், மாநிலத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியவர் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நரேந்திர மோடிதான் ஜல்லிக்கட்டு நாயகன். அனைவருக்கும் வீடு என்ற திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 2023ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பாஜக - அதிமுக வெற்றிக் கூட்டணியாகச் செயல்படும்" என்றார்.

பின்னர் பேசிய தாராபுரம் பாஜக வேட்பாளர் எல். முருகன், பிரதமர் மோடி வருகையில் இருந்தே, தாராபுரம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதை நாம் காணலாம் என்றார்.

Last Updated : Mar 30, 2021, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details