கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.