தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்! - MNM

திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வாக்காளர்கள்  காலில் விழுந்தும், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடு வேட்பாளர்!

By

Published : Apr 13, 2019, 5:05 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சந்திரகுமார் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

வேட்பாளர் சந்திரகுமார்

அப்போது நஞ்சகவுண்டன்பாளையம் காலனி பகுதி மக்களிடையே சாக்கடைகள் எல்லாம் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதலளித்த அப்பகுதி மக்கள், சுத்தம் செய்ய யாரும் வருவதில்லை என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து சாக்கடையில் இறங்கி குப்பைகளை அகற்றியுள்ளார். மேலும், வாக்காளர்களின் காலில் விழுந்து தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details